தோனி பிறந்தநாளுக்கு சச்சின் என்ன பண்ணார் தெரியுமா?
கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை டான் பிராட்மேன், டெண்டுல்கர், கபில்தேவ் என குறிப்பிடும்படியான ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை, இன்றைய காலகட்டத்தில் அனைவரின் உச்சரிப்பிலும் தோனி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
அந்தளவுக்கு அவர் தனது சகவீரர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கை, அவருடைய சிறப்பான செயல்பாடு என ஒரு மிகச் சிறந்த கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் அவரை உலகிற்கு வெளிக்காட்டியது.
இந்தியா தோல்வியின் விளிம்பில் இருக்கும்போதும், எப்படி சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் இருந்தால் ஒரு நம்பிக்கை நமக்கு இருக்குமோ, அதேபோன்றதொரு நம்பிக்கை தோனி மைதானத்தில் இருந்தாலும் இருக்கும். அதை சமீபத்திய ஐபிஎல் போட்டிகளில் நம்மால் பார்க்க முடிந்தது. அந்தளவுக்கு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கக்கூடியவர்.
இந்நிலையில், நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிய நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அவருக்கு அற்புதமான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது தோனியுடன் டெண்டுல்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் உங்களது ஹெலிகாப்டர் ஷாட்ஸ் போலவே நீங்களும் எப்போது உயர பறந்துகொண்டே இருக்கணும் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.
ரசிகர்களான நாம் மட்டுமல்ல, தோனியின் ஃபேவரைட் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை, சச்சினும் எவ்வளவு நேசித்துள்ளார் என்பதை இந்த கருத்தின் மூலமாகவே நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.