விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் அஜித் பட நடிகை!
நடிகர் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, 2வது பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், 2ம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஜித் பட நடிகை நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் படங்கள் என்றாலே அதற்கென தனி ரசிகர்கூட்டம் உண்டு. அதேபோல் இந்தப்படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பும் இந்தப்படத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதேபோல் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அருமையாக நடித்து அனைவரையும் கவரந்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தற்போது தள்ளிப் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், இயக்குநர் வெற்றிமாறன், இப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்திற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வீடியோ ஒன்றையும் நடிகர் சூரி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் படத்திற்கான சில சிஜி காட்சிகளுக்கும் சிறிது அவகாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
அதனால் இப்படம் டிசம்பர் 2023 அல்லது 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் அஜித் பட நடிகை ஜோடியாக இணைப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அஜித்தின் ‘துணிவு’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியார் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.