ஆஸ்கர் நாயகனை சந்தித்த உலக நாயகன்!
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில், அவர் தனக்கு மிகவும் நெருக்கமான ஆஸ்கார் விருதுபெற்ற நாயகனை சந்தித்ததையடுத்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, ராணா டகுபதி என பல பிரபலங்களும் இணைந்து நடிக்கும் படம்தான் ‘kalki 2898 AD’. இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ அமெரிக்காவின் சான்டியாகோ காமிக்கானில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி என பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றதையடுத்து, ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் உடனான சந்திப்பு நிகழ அவருக்கு வாய்ப்பாக அமைந்தது.
மைக்கேல் வெஸ்ட்மோர், ‘Star Trek: First Contact’ (1996), ‘Star Trek: Deep Space Nine’ (1993) மற்றும் ‘Star Trek: Insurrection’ (1998) படங்களின் மூலமாக ஒப்பனை கலைஞராக பிரபலமாக அறியப்படுகிறார்.
அதுமட்டுமல்லாமல், ‘இந்தியன்’, ‘அவ்வை சண்முகி’, ‘ஹே ராம்’ மற்றும் ‘தசாவதாரம்’ படங்களில் கமல்ஹாசன் மற்றும் மைக்கேல் வெஸ்ட்மோர் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் நிலையில், மைக்கேல் வெஸ்ட்மோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டமான படைப்பாக
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சாக நடந்து வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா மற்றும் பல பிரபலங்களும் நடித்துள்ள நிலையில், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
அனைத்து பணிகளும் முடிந்து ‘இந்தியன் 2’ படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.