அருள்நிதி நடிப்பில் டிமான்ட்டி காலனி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!
நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவரவிருக்கும் டிமான்ட்டி காலனி 2 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு வெளியான ஹாரர் த்ரில்லர் படமான ‘டிமாண்டே காலனி’ படத்தை இயக்கியதன் மூலம் அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமானார். அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின்னர், நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள், சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கினார்.
பின்னர் 7 ஆண்டுகள் கழித்து டிமான்ட்டி காலனி 2 படத்தை இயக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் அருள்நிதியுடன் இணைந்து இப்படத்தை இயக்கி வருகிறார்.
அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஹாரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டிமான்ட்டி காலனி முதல் பாகத்தைப் போல், டிமான்ட்டி காலனி 2 படமும் அதிரவைக்கும் ஹாரர த்ரில்லர் படமாக உருவாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் இந்த வருட இறுதிக்குள் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.