டி20 உலகக்கோப்பை எப்போ தெரியுமா? வெளியான அறிவிப்பு!
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வைத்து நடைபெறவிருக்கும் நிலையில், அடுத்து 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையானது அக்டோபர் 5ம் தேதி முதல் போட்டி துவங்கி, இறுதிப்போட்டியானது நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து இந்த தொடர் முடிந்த 6 மாத காலத்திற்குள் டி20 உலகக்கோப்பை போட்டியானது நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 டி20 உலகக்கோப்பை போட்டியானது ஜூன் 4ம் தேதி ஆரம்பித்து ஜூன் 30ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட்டை இன்னும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தமுறை டி20 உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் மோதவுள்ள நிலையில் 55 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் வீதம் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும்.
அந்த 8 அணிகளும், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இந்தமுறை டி20 போட்டியில் 20 அணிகள் மோதவுள்ளதோடு, இப்போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் அமெரிக்காவிலும் பிரபலமடைய வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.